புதுடெல்லியின் கோவிந்த்புரி பகுதியில் உள்ள துக்ளகாபாத் எக்ஸ்டென்ஷனில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஐந்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் தரைத்தளத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் தீப்பிடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், விபத்து நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சி, இந்த வழக்கின் போக்கையே தற்போது மாற்றியுள்ளது.

“>

இதனால் அப்பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், அதிகாலை 2:23 மணியளவில் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி ஒரு மர்மப் பெண் அந்த கட்டடத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது. அவர் உள்ளே சென்ற சில நொடிகளில் கட்டடத்தின் உட்புறத்திலிருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் தோன்றுவதும், உடனடியாக அந்தப் பெண் அங்கிருந்து வெளியேறி நடந்து செல்வதும் அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

இந்த விபத்தில் சதிவேலை ஏதேனும் இருக்குமோ என்ற கோணத்தில் த தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.