இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு சிறுவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டு கடுமையாகச் சண்டையிட்டுக் கொள்கின்றனர். சண்டையின் இறுதியில், ஒரு சிறுவனைத் கீழே தள்ளிவிட்டுவிட்டு, மற்றொரு சிறுவன் அங்கிருந்து வேகமாக ஓடுகிறான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று, ஓடி வந்த சிறுவன் மீது மிகவேகமாக மோதி விடுகிறது.

​சண்டையிட்ட ஆத்திரத்தில் எதையும் கவனிக்காமல் ஓடிய அந்தச் சிறுவன் மீது ஆட்டோ மோதிய விபத்து பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கிறது. சிறுவர்கள் விளையாட்டாகத் தொடங்கும் சண்டைகள் கூட சில நேரங்களில் எவ்வளவு பெரிய ஆபத்தில் போய் முடியும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், சிறுவர்களைக் கண்காணிப்பதில் பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் எச்சரிக்கிறது.