இந்தியாவில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடைக்குச் சென்ற பெண் ஒருவர், அங்கிருந்த ஊழியர்களின் மோசமான சேவை குறித்து மிகுந்த அதிருப்தியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் அமர்ந்த மேசையிலிருந்த அட்டைப்பெட்டிகளைக் கூட அகற்றாமல் ஊழியர்கள் அலட்சியமாக இருந்ததாகவும், டிஷ்யூ பேப்பர் கேட்டால் அவரே எடுத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் புகாரளித்துள்ளார். மேலும், அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மேஜை மீது அழுக்குத் துணியை வந்து வைத்தது போன்ற செயல்கள் அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன.

​கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதை விட, செல்போன் பயன்படுத்துவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக அந்தப் பெண் சாடியுள்ளார். ஜப்பான் போன்ற நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கடவுளாக மதித்து மிகச் சிறந்த சேவை வழங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் இத்தகைய சேவை மனப்பான்மை குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ‘சர்வீஸ் குவாலிட்டி’ பற்றிய பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.