இந்தூர் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய பவுலர்கள் ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், ஹர்ஷித் ராணா செய்த ஒரு மோசமான ஃபீல்டிங் குளறுபடியால், அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ்க்கு ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது. நிதீஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சில் பிலிப்ஸ் கொடுத்த கேட்சை, ஹர்ஷித் ராணா சரியாகக் கணிக்காமல் தவறவிட்டார். இதைப் பார்த்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விரக்தியில் தலையில் அடித்துக் கொண்டதும், விராட் கோலி அதிருப்தி அடைந்ததும் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) January 18, 2026
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். மறுபுறம், அபாரமான ஃபார்மில் இருக்கும் டேரில் மிட்செல் தனது 9-வது சதத்தை விளாசி நியூசிலாந்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் சேர்த்து இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்தச் சதத்தின் மூலம் டேரில் மிட்செல் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து இந்திய ஜாம்பவான்கள் ரோகித் மற்றும் கோலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
