சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோவில், பல இளைஞர்கள் கூட்டமாகப் பைக் ஓட்டிச் செல்கின்றனர். அதில் ஒருவன் ‘லெஹரியா கட்’ அடித்து ஆபத்தான முறையில் ஸ்டண்ட் காட்ட முயல, எதிர்பாராத விதமாக அருகில் வந்த மற்றொரு பைக் மீது மோதினான். அந்த வேகத்தில் பின்னால் வந்த இளைஞர் நிலைதடுமாறி நடுரோட்டில் தூக்கி எறியப்பட்டார். நல்லவேளையாக அந்த இளைஞர் உயிர் பிழைத்தாலும், இந்த விபத்து பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.
बाइक कैसे चलाते हैं देखो.. 🚳🚲
ऐसे लोगों के बारे में आप क्या कहोगे?🤔🥹 pic.twitter.com/sSQL6ozp9o
— Prisha (@pki42) January 18, 2026
இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவதை நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். “இவர்களுக்குத் தங்கள் உயிரின் மீது அக்கறை இல்லையென்றால் என்ன, சாலையில் செல்பவர்களின் உயிரோடு விளையாடுவது ஏன்?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறிச் சாலைகளைப் போர்க்களமாக்கும் இத்தகைய இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.
