மதுரை மாவட்டத்திலுள்ள கோ.புதூர் கற்பக நகரில் போஸ்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் போஸ் பால் வாங்குவதற்காக அந்த பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் போஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த போஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே போஸ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.