மத்தியப் பிரதேசம் நரசிங்பூரில் உள்ள கரேலி நகரில் வியாபாரி திபன்ஷு யாதவ் மீது போலீசார் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிக்கு வெளியே தனது வாகனத்தை நிறுத்தியதற்காக, முன்கூட்டியே எச்சரிக்கையின்றி போலீசார் வாகனத்தை இழுத்துச் செல்ல முயன்றதில், வாக்குவாதம் ஏற்பட்டது. இது உடனே தாக்குதலாக மாற, 4-5 போலீசார் சேர்ந்து அவரை தரையில் தள்ளி அடிக்கின்ற காட்சிகள் காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளன.

“>

 

இந்த சம்பவத்தால் கோபமடைந்த உள்ளூர் வணிகர்கள், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சஞ்சய் சர்மா தலைமையில் கரேலி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

சம்பவம் குறித்து கூடுதல் எஸ்பி சந்தீப் பூரியா நேரில் வந்து பேசி, “பாரபட்சமற்ற விசாரணை நடக்கும், குற்றவாளி யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். வியாபாரி திபன்ஷு, தன்னை முறையற்ற முறையில் தாக்கியதாகக் கூறி நீதி கோர, இந்த விவகாரம் தற்போது மாநில அளவில் பெரும் விவாதமாகி உள்ளது.