மகாராஷ்டிராவின் சந்திரபூர் நகரில் ஒரு  பேக்கரிக்கு முன்பு, சாலை ஓரத்தில் நடந்து சென்ற ஒரு இளைஞர், பழைய வடிகால் மூடியின் மீது காலை வைத்தபோதே அது உடைந்து, நேராக வடிகாலுக்குள் விழுந்தார்.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இளைஞர் அப்போது மின்சார ஸ்கூட்டரில் இருந்து பெட்டிகளை இறக்கி பேக்கரிக்குள் நடந்து செல்ல முயன்ற நேரமே இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

“>

 

சம்பவத்தைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஒருவர் உடனடியாக ஓடி வந்து அந்த இளைஞனை காப்பாற்ற உதவினார். இதன் மூலம் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மக்கள் கூறுவதாவது, நகராட்சி அமைத்துள்ள பல வடிகால் மூடிகள் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இப்படி ஒரு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக்கூடும் என்பதே. எனவே சம்பவ இடத்திற்கு  நடவடிக்கை எடுத்து, அனைத்து மூடிகளும் பரிசோதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.