லோக்சபாவில் நேற்று  நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி வேணுகோபால் எழுப்பிய கேள்வி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

2010-ஆம் ஆண்டு குஜராத்தின்  அமைச்சராக இருந்தபோது, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட அமித்ஷா, அந்த சூழலில் ஒழுக்கம் கடைப்பிடித்தாரா என சந்தேகம் எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, “அந்த வழக்கில் கைதான பிறகு உடனே நான் பதவியை ராஜினாமா செய்தேன். வழக்கு முடிந்து விடுதலையாகும் வரை எந்த பதவியையும் ஏற்கவில்லை. எனது நேர்மையை நீதிமன்றமே நிரூபித்தது. எனவே, எனக்கு யாரும் ஒழுக்கம் பற்றி பாடம் சொல்லத் தேவையில்லை” எனக் கடுமையாக பதிலடி கொடுத்தார். அவரது பதில், சபையில் ஒரு உணர்ச்சியை  ஏற்படுத்தியது.