சென்னை மாவட்டத்தில் உள்ள பம்மல் திருவள்ளூர் தெருவில் நரேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். நரேஷ் குமாருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் நரேஷ் குமாருக்கு குழந்தை பிறந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நண்பர்களுடன் வெளியே செல்வதற்காக நரேஷ் குமார் வெளியே புறப்பட்டு கொண்டிருந்தார். அவர் பாத்திரத்தில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தி சுடு தண்ணீர் போட்டுள்ளார்.
தண்ணீர் சூடாகி விட்டதா என்று தொட்டு பார்த்தபோது நரேஷ் குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் படுகாயமடைந்த நரேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று நரேஷ் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் நரேஷ் குமார் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
