2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பிரச்சார நடவடிக்கையை தீவிரமாக ஆரம்பித்து இருக்கிறார்.

தமிழகத்தில் திமுக அரசு மீது கடும் விமர்சனங்களைச் சுமத்தும் அவர், அதிமுகவிற்கு எதிராக எதுவும் பேசாமல், மிகச் சீரான அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறார். இதனால், விஜய் தலைமையிலான தவெக, எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவுகின்றன.

இதனிடையே, நடப்புத்தகவல்களின்படி, NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தும் நியமிக்கப்படுமாயின், அதனை ஏற்க முடியாது என ஓபிஎஸ், தினகரன் தரப்பினர் அடுக்கடுக்கான புகார்கள்  தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அமமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பினர், தவெகவுடன் அரசியல் கூட்டணி  ஏற்படுத்தும் சாத்தியம் அதிகம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாஜகவுக்கு புதிய பதற்றம் உருவாகியுள்ளது என அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.