இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமையில் வருகின்றது. இதனால், இதற்குமுன் வரும் அக்டோபர் 18 (சனி) மற்றும் அக்டோபர் 19 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களும் இயற்கை விடுமுறையாக உள்ளன. இதனுடன், தீபாவளி தினத்துக்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையாக இருப்பதால், அந்த நாளும் அரசு விடுமையாக அறிவிக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருவேளை செவ்வாய்க்கிழமையும் விடுமையாக அறிவிக்கப்பட்டால், மக்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இது குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும், ஊருக்குச் செல்லவும், பயண திட்டங்களை அமைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான முடிவை அரசு எப்போது அறிவிக்கிறது என்றும் அனைவரும் காத்திருக்கின்றனர்.
