மதுரை ஆதீனம் இரு பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சதீஷ்குமார் ஆதினம் பேசிய விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் அப்படியே முடிந்திருக்கும். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில் ஆதீனம் பேசியதை காவல்துறை அரசியல் நோக்கத்துடன் வழக்காக பதிவு செய்து பெரிதாக்கி உள்ளது.
இதன் காரணமாக காவல்துறை எந்த ஒரு கடும் நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த இடைக்கால உத்தரவை தற்போது அக்டோபர் 27ம் தேதி வரை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
