காஞ்சிபுரம் படப்பையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி சொல்கிறார் அவரது ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்தது என்று பேசுகிறார். பழனிசாமி அவர்களே நீங்கள் எதில் நம்பர் ஒன் என்று தெரியுமா?… பதவி சுகத்திற்காக மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தீர்களே அதில் தான் நீங்கள் நம்பர் ஒன். எப்படியெல்லாம் மோடிக்கு, மத்திய அமைச்சர்களுக்கு, பாஜகவுக்கு காவடி பாடினீர்கள். மோடி தான் எங்கள் டாடி என்று சொன்னீர்களே” என்று கூறியுள்ளார்.