பிரதமர் மோடி முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி வரும் பிப்.27ஆம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். பல்லடத்தில் நடைபெறும் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நிறைவு நிகழ்ச்சியில், இருவரும் இணைய இருப்பதாக பாஜகவினர் தங்களது X பக்கத்தில் பதிவிட்டு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்