தமிழகத்தில் ஆன்மீக அரசியலை வைத்து பாஜக காய் நகர்த்துவதை அமைச்சர் ரகுபதி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “ராமா ராமா” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை எல்லாம், இன்று “முருகா முருகா” என்று சொல்லும் அளவுக்குத் தமிழக மக்கள் ஓடவிட்டுள்ளார்கள் என்று அவர் கிண்டலாகப் பேசியுள்ளார். வடமாநிலங்களைப் போல இங்கு ராமரை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதால், தமிழகத்தில் முருகனின் பெயரைச் சொன்னால்தான் எடுபடும் என்று பாஜக புது ரூட் பிடித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஒரு படி மேலே போய், “முருகனை வேண்டுமானால் பாஜக கையில் எடுக்கலாம், ஆனால் அந்த முருகனின் வேல் எங்கள் கையில்தான் இருக்கிறது” என்று கூறி அதிரடி ட்விஸ்ட் கொடுத்துள்ளார். மக்கள் என்னதான் பக்திமான்களாக இருந்தாலும், ராம கோஷம், முருகன் கோஷம் என எந்தப் பெயரைச் சொல்லி வந்தாலும் தமிழக மக்களை ஒருபோதும் திசைதிருப்ப முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த ஆன்மீக அரசியல் பேச்சு இப்போது இணையதளங்களில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.
