தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை முடிந்து காவல் துறையினர் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் எனக்கு எல்லாமே மிகச் சௌகரியமாக இருக்கிறது, நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்” என்று சிரித்தபடியே கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, சர்ச்சைக்குரிய பேச்சால் கைதாகிவிட்டு சிறைவாசம் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சியமாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போ பத்து ரூபாய் செந்தில் பாலாஜி போல் இன்னும் ஒரு வருஷத்துக்கு பாளையங்கோட்டை சிறையிலேயே இருக்க வேண்டியதுதானே?
என்ன மயி* க்கு ஜாமீன் கேக்குறே? pic.twitter.com/G3lpKwzyl2
— கழுகுப்பார்வை 🦅🇮🇳 (@TheEagle3_0) July 22, 2026
“>
இந்தச் சம்பவம் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
