தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே ஆள் பிடிக்கும் படலம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இன்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இபிஎஸ் அவர்களுக்குக் கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றதுடன், அவர்களுடன் சிரித்தபடி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். டெல்டா மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் இந்த ஆதரவு மாற்றம் அதிமுகவுக்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.

​சிறுபான்மையினர் வாக்குகள் பொதுவாக திமுக பக்கமே இருக்கும் என்கிற நிலையை உடைக்கும் வகையில், இந்த இணைவு நிகழ்வு அமைந்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்குச் செய்யப்பட்ட நன்மைகளை முன்வைத்து இபிஎஸ் காய் நகர்த்தி வரும் வேளையில், இந்த 200 பேரின் வருகை அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் இந்த வாக்குகள் யாருக்குச் சாதகமாக அமையும் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.