உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு சிறிய வாகனத்திற்குள் ஏராளமான மாணவர்கள் அடைக்கப்பட்டு, இடமில்லாமல் சிலர் நின்றுகொண்டும், சிலர் வாகனத்தின் பின்பகுதியில் தொங்கிக்கொண்டும் பயணம் செய்கின்றனர்.

கிராமப்புறங்களில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததே இது போன்ற ஆபத்தான பயணங்களுக்குக் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டப்படும் இந்த அலட்சியம் குறித்துப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உள்ளே இருப்பவர்கள் வெளியே வரக்கூட முடியாது, இது மிகவும் பயமாக இருக்கிறது” என்றும், “ஆர்.டி.ஓ அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா?” என்றும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பள்ளி வாகனங்களுக்கெனத் தனியாகப் பாதுகாப்பு விதிகள் இருந்தும், அவை முறையாகப் பின்பற்றப்படாதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.