சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘மிகவும் வருத்தமான வீடியோ’ ஒன்று, பள்ளி குழந்தைகளின் உணவுப் பழக்கம் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், பல குழந்தைகளின் மதிய உணவுப் பெட்டிகளில் சத்தான உணவுகளுக்குப் பதிலாக சிப்ஸ், மேகி மற்றும் துரித உணவுகள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாகப் பெற்றோர்கள் இது போன்ற எளிமையான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வளரும் பருவத்தில் முறையான சத்துக்கள் கிடைக்காதது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

“>

இது குறித்துப் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு அவசியமாகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக, சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், காய்கறிகள் கலந்த சாதம் அல்லது சப்பாத்தி போன்றவற்றைத் தயாரித்து வழங்கலாம். சிப்ஸிற்குப் பதிலாக நட்ஸ் , பழங்கள் அல்லது வேகவைத்த பயறு வகைகளைச் சிற்றுண்டியாகக் கொடுத்து அனுப்பலாம்.

மேலும் காலையில் நேரத்தை மிச்சப்படுத்த முன்கூட்டியே திட்டமிட்டு, காய்கறிகளை வெட்டி வைப்பது எளிமையாக இருக்கும். குழந்தைகளின் மதிய உணவுப் பெட்டி என்பது வெறும் வயிறு வளர்ப்பதற்கானது மட்டுமல்ல, அது அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கான அடித்தளம் என்பதை உணர்ந்து, சத்தான மற்றும் சமச்சீரான உணவுகளைப் பேக் செய்வதே சிறந்தது.