தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, முதியோர்களைப் பாதுகாக்கும் வகையில் மிகச் சிறந்த ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன்படி, அரசு வேலையில் இருக்கும் ஊழியர்கள் யாராவது தங்கள் வயதான பெற்றோர்களைச் சரியாகக் கவனிக்காமல் கைவிட்டால், அரசாங்கம் அவர்களின் சம்பளத்தில் நேரடியாக நடவடிக்கை எடுக்கும். பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.q
இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் 15 சதவீதத் தொகையானது, அந்த ஊழியரின் பெற்றோருடைய வங்கி கணக்கில் அரசாங்கத்தால் நேரடியாகச் செலுத்தப்படும். பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் தவிக்க விடுபவர்களுக்கும், அவர்களைப் பாரமாக நினைப்பவர்களுக்கும் இந்தச் சட்டம் ஒரு பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. முதிய வயதில் தவிக்கும் பெற்றோர்களுக்குத் தேவையான பொருளாதாரப் பாதுகாப்பை இந்தச் சட்டம் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
