அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மிருகக்காட்சிசாலையை நடத்தி வரும் பிரபலமான ஜே பிரூவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இருதலை ஆமையின் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஓட்டுக்குள் இரண்டு தலைகளுடன் பிறந்த அந்த ஆமைக்கு இரண்டு வாய்களும், நான்கு கண்களும் உள்ளன. அந்த ஆமையின் இரண்டு வாய்களும் தனித்தனியாகவும் முழுமையாகவும் செயல்படுவதை வீடியோவில் காண முடிகிறது.
இயற்கையின் இந்த விசித்திரமான படைப்பைக் கண்டு வியந்து போன நெட்டிசன்கள், இந்த வீடியோவை இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமான முறை கண்டு ரசித்துள்ளனர். ஜே பிரூவர் தனது பதிவில், “ஒரே ஓட்டுக்குள் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த இரண்டு தலைகளும் நண்பர்களாகவே இருக்க வேண்டும்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
இந்த விசித்திரமான ஆமையைக் கண்டு பலரும் ஆச்சரியமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இயற்கையின் அற்புதமான அதிசயம்” என்று ஒரு பயனர் புகழ, மற்றொரு பயனர், “ஒரே உடலில் இரண்டு மூளைகள் இருக்கும்போது, எந்தத் திசையில் செல்வது என்று இந்த ஆமை எப்படி முடிவு செய்யும்?” என்ற சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பியுள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
