ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 வயது சிறமி ஒருவர் பள்ளியின் கழிவறையில் மறைந்திருந்த 35 வயது நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூர சம்பவம் சனிக்கிழமை (அக்டோபர் 11, 2025) நடந்தது. குற்றவாளி, பள்ளியின் சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்து, கழிவறையில் மறைந்திருந்துள்ளார். இது தெரியாமல் சிறுமி கழிவறைக்கு வந்தபோது, அவர் அவளைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அதே சுவரைத் தாண்டி தப்பினார்.
பள்ளி நிர்வாகம் அவளது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தது, பின்னர் அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதை அடுத்து POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மூலம் குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் என்ற தகவல் மட்டும் தான் தற்போது வரை வெளியாகி உள்ளது. இந்த சம்பவம், பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை எழுப்பியுள்ளது.
