சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள தஹதஹா அரசுப் பள்ளியில் 35 மாணவர்கள் தங்களின் மணிக்கட்டுகளை பிளேடு போன்ற கூர்மையான ஆயுதத்தால் அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாணவரின் பெற்றோர் இதைத் தற்செயலாகக் கவனித்து பள்ளிக்குச் சென்று விசாரித்தபோதுதான், பல மாணவர்களும் இதேபோல் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக மருத்துவக் குழுவினர் மற்றும் உளவியல் நிபுணர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மாணவர்கள் ஏன் இத்தகைய விபரீத முடிவை எடுத்தார்கள் என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் புனீத் ராம் சாஹுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பெற்றோரிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை உறுதி அளித்துள்ளது.