குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, தவறான திசையில் (wrong side) நுழைந்து ஆட்டோ ரிக்ஷா மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த கோர விபத்தில், காரின் வேகம் தாங்காமல் ஸ்கூட்டரில் வந்த நபர் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், எதிரே வந்த வாகனங்களை அடுத்தடுத்து மோதி நிலைகுலைந்ததில் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
#Ahmedabad:નારણપુરા ભાવિન ચાર રસ્તા ખાતે અકસ્માત
પુર ઝડપે આવતા કાર ચાલકે એક્ટીવા અને રીક્ષા બંનેને લીધા હડફેટે
એક્ટીવા ચાલક ગંભીર રીતે ઘાયલ
જોરદાર ટક્કર થી રીક્ષાની મુસાફરીની બદલાઇ ગઇ દિશા, જુઓ #CCTV #Accident #Police pic.twitter.com/eMw7bWvwF3— Sahil Dodiya (@SahilDo90793805) December 30, 2025
“>
இந்த விபத்து தொடர்பான வீடியோவில், தவறான பாதையில் மின்னல் வேகத்தில் வரும் கார், முதலில் ஒரு ஆட்டோவை இடித்துவிட்டு, பின்னர் ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபர் மீது பயங்கரமாக மோதுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறி தவறான திசையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் ஆபத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, அஜாக்கிரதையாக காரை ஓட்டிய ஓட்டுநர் மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
