உத்தரப்பிரதேச மாநிலம் மவூ மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் ஓடும் இரயிலுக்கு அடியில் படுத்து ஆபத்தான முறையில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தண்டவாளத்தில் இளைஞர் படுத்திருக்க, அவருக்கு மேல் அதிவேகமாக இரயில் கடந்து செல்கிறது.
இரயில் சென்றவுடன் அவர் காயமின்றி எழுந்து நின்று போஸ் கொடுக்கிறார். வெறும் சில ‘லைக்குகளுக்காகவும்’ புகழுக்காகவும் தனது உயிரைப் பணயம் வைத்து அவர் செய்த இந்தச் செயல், இணையதளவாசிகளிடையே கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மவூ போலீசார், அந்த இளைஞரின் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
यूपी पुलिस से हाथ जोड़कर अनुरोध है कि इन भाई साबह को अपना जलबा जरूर दिखाए। वीडियो वायरल है, मऊ के थाना कोतवाली इलाके का बताया जा रहा है। युवक का नाम अजय राजभर है।@maupolice @Uppolice @UPPViralCheck pic.twitter.com/yN2gvfZroy
— Vinay Shakya(ونئے شکیا۔) (@vinayshakya583) December 29, 2025
“>
இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்றும், இது உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். வீடியோவில் உள்ள நபரைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டு இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
