பிரேசில் நாட்டில் சிறுவன் ஒருவன் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அவன் மைனர் என்பதால் சட்டப்படி போலீசாரால் கைது செய்ய முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், அந்தச் சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகும் நாளைக் குறித்து வைத்திருந்த போலீசார், அவன் பிறந்தநாள் கொண்டாடிய அதே நேரத்தில் கேக் மற்றும் குளிர்பானங்களுடன் அங்கு ஆஜராகினர்.
Brazil Police Wait Until Thief Turns 18, Celebrate Birthday Midnight, Then Arrest Him Immediately.
pic.twitter.com/2mh6r9wdRs— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 29, 2025
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பாடி அவனது 18-வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய போலீசார், கேக் வெட்டி முடித்த அடுத்த நொடியே அவன் ‘மேஜர்’ ஆகிவிட்டதால் சட்டப்படி விலங்கு மாட்டி சிறைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் இந்த அதிரடி “பர்த்டே பிளான்” குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
