மும்பையில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண்களை ஆட்டோ டிரைவர் நடுவழியிலேயே இறக்கிவிட்டு, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீனா சோனி என்ற இளம்பெண் தனது தோழியுடன் பாந்த்ரா ரயில் நிலையத்திலிருந்து ஜியோ கன்வென்ஷன் சென்டருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு வந்த சத்தம் அதிகமாக இருந்ததாகக் கூறி, ஆட்டோ டிரைவர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இடையில் இறங்கச் சொன்ன டிரைவரிடம், சேர வேண்டிய இடத்திற்கு வந்ததும் பணம் தருவதாக டீனா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, “உன்னை இங்கேயே அடித்துக் கொன்றுவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by T I N A S O N I 🌻 CONTENT CREATOR (@tinaa.soni_)

இந்த மோதலின் போது, தனது கூட்டாளிகளை வரவழைப்பதாகக் கூறி மிரட்டிய டிரைவர், வீடியோ எடுத்த டீனாவின் மீது ஆட்டோவை ஏற்றவும் முயன்றுள்ளார். அந்த இடத்தில் போக்குவரத்து போலீசாரும், பொதுமக்களும் இருந்தும் யாரும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என டீனா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மும்பை போன்ற பெருநகரங்களிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா என ஆவேசமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து டீனா அளித்த புகாரின் பேரில், ஆட்டோ எண்ணை வைத்து போலீசார் அந்த டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.