தமிழகத்தின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பரந்தூரில் புதிய பிரம்மாண்ட விமான நிலையம் அமைப்பது மிக அவசியம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்தின் கொள்ளளவு முடிவுக்கு வந்துவிட்டதால், சர்வதேச அளவில் பல நாடுகளுக்குப் புதிய விமானங்களை இயக்க முடியாத சூழல் நிலவி வருவதாகவும், இதனால் சென்னைக்கு 2வது பிரம்மாண்ட விமான நிலையம் உடனடியாகத் தேவை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது AAI அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தின் அவசியம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள உள்கட்டமைப்புத் தேவைகள் குறித்த விரிவான ஆய்வறிக்கை
