முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜகவின் முக்கிய முகமுமான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார் என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. தனது விலகலுக்கான காரணங்கள் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கிய 5 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினிடம் அவர் நேரடியாக வழங்கியுள்ளார்.

கடந்த 2020 ஆகஸ்ட் 25-ல் பாஜகவில் இணைந்து, 2021 ஜூலை முதல் 2025 ஏப்ரல் வரை பாஜக மாநிலத் தலைவராகவும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அண்ணாமலை, தற்போது கட்சியிலிருந்து முற்றிலும் விலக முடிவெடுத்துள்ளார்.​இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்து வந்த அவசர அழைப்பை ஏற்று, அவரைச் சந்திக்கச் சென்ற அண்ணாமலை தான் ஏன் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்பதற்கான முழு விவரங்களையும் காரணங்களையும் அவரிடம் நேருக்கு நேர் விளக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வரும் ஜூன் 4-ஆம் தேதி அண்ணாமலையின் பிறந்தநாளன்று, அவர் தனது விலகலுக்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் மற்றும் ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப் போகிறாரா இல்லையா என்பது குறித்த அதிரடியான அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.