ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபு கன்வர், திருமணத்திற்குப் பிறகும் தனது லட்சியத்தைக் கைவிடாமல் சிவில் நீதிபதியாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கல்வியில் சிறந்து விளங்கிய தீபு, தனது கணவர் லோகேந்திர சிங்கின் ஊக்கத்தால் பி.காம் முடித்த பிறகு, சட்டப் படிப்பையும் மேற்கொண்டார்.

மேலும் இவரின் இந்த வெற்றிப்பயணத்தில், குடும்பத்தினர் அளித்த ஆதரவு அளப்பரியது. குறிப்பாக, வீட்டு வேலைகளை விட கல்வியே முக்கியம் என வலியுறுத்திய அவரது மாமனார் மற்றும் மாமியாரின் ஆதரவு, அவரைத் தொடர்ந்து முன்னேறத் தூண்டியது.

இதனால் பல தடைகளைத் தாண்டி, கடின உழைப்பிற்குப் பிறகு 2025-ம் ஆண்டில் குஜராத் நீதித்துறை தேர்வில் வெற்றி பெற்று அவர் சிவில் நீதிபதியானார். தொடர் தோல்விகள் வந்தபோதும் மனம் தளராத தீபு, தனது குடும்பத்தினரின் முழுமையான நம்பிக்கையோடு இலக்கை அடைந்தார்.

இந்நிலையில் “ஒரு மருமகளை மகளாக நினைத்து ஆதரிக்கும் குடும்பம் கிடைத்தால், எதையும் சாதிக்க முடியும்” என்று கூறும் தீபுவின் வாழ்க்கை, திருமணத்திற்குப் பிறகு கல்வி தொடர விரும்பும் பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.