பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பவிருந்த அண்ணாமலைக்கு, மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் இருந்து திடீரென அவசர அழைப்பு வந்துள்ளது. இந்த திடீர் அழைப்பை ஏற்று அண்ணாமலை உடனடியாக அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசி இருப்பது, தற்போதைய அரசியல் களத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் கட்சியில் தான் ஓரங்கட்டப்பட்டது குறித்து அண்ணாமலை தேசியத் தலைவரிடம் கடிதம் அளித்திருந்த நிலையில், அவர் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் இந்த பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன. டெல்லியில் அடுத்தடுத்து அரங்கேறும் இந்த முக்கிய தலைவர்களின் சந்திப்புகள், தமிழக பாஜாகவின் எதிர்காலத்திலும், ஒட்டுமொத்த தமிழக அரசியல் நகர்வுகளிலும் மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
