நிழல் உலகக் கல்விக்கூடங்கள் என்று அழைக்கப்படும் கோச்சிங் சென்டர்கள், இன்று வெறும் வணிக மையங்களாக மாறி வருவதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை மிகக் கொடூரமாக கைத்தடியால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மேலும் அந்த மாணவன் வலியால் துடித்தபோதிலும், அந்த ஆசிரியர் சற்றும் இரக்கமின்றி மீண்டும் மீண்டும் தாக்குவது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வி என்ற பெயரில் நடக்கும் இத்தகைய வன்முறைச் செயல்கள், பயிற்சி மையங்கள் உண்மையில் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குகின்றனவா அல்லது அவர்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சிதைக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. “பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் என்ன மாதிரியான அரக்கர்கள் இந்தத் தொழிலுக்குள் நுழைந்திருக்கிறார்கள்?” என்று நெட்டிசன்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. கல்வியை ஒரு சேவையாகப் பார்க்காமல் லாபம் ஈட்டும் தொழிலாக மட்டுமே பார்க்கும் சில நிறுவனங்களின் போக்கினால் கேள்விக்குறியாகியுள்ளது.