சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,15,440 ரூபாய்க்கும் ஒரு கிராம் 14,430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேப் போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,742 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,25,936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
