தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி பள்ளியில் குழந்தையை சாக்கை கொண்டு மூடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னிமலை முருகன் கோவில் பகுதியில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில் காலையில் வழக்கம் போல் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளனர்.
அப்போது அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையை மிரட்டுவதற்காக அங்கிருந்த ஊழியர் சாக்கை கொண்டு குழந்தையை மூடி மிரட்டினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட ஊழியரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடியில் குழந்தையை சாக்கை கொண்டு மூடிய ஊழியர் கைது
WATCH LIVE : https://t.co/n1hGsgTDF7
#Tenkasi #Anganwadiworker #News18Tamilnadu pic.twitter.com/dG4q4zjTbw
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 5, 2026
