“தமிழ்நாடு மின்வாரிய (TNEB) அலுவலகத்தில் அரங்கேறிய ஹார்டு டிஸ்க் திருட்டு சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் கைதான கொள்ளையன் கோபிநாத் குறித்து அதிர வைக்கும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வெறும் 18 ஹார்டு டிஸ்க்குகள் மட்டுமே திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கோபிநாத் பெங்களூரில் உள்ள ஒரு கடையில் மொத்தம் 35 ஹார்டு டிஸ்க்குகளை விற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஒட்டுமொத்த போலீஸ் படையையுமே தலைசுற்ற வைத்துள்ளது.
அப்படியானால், மின்வாரியத்தில் திருடப்பட்ட 18 ஹார்டு டிஸ்க்குகள் போக, மீதமுள்ள 17 ஹார்டு டிஸ்க்குகளை அவன் எங்கே திருடினான்? யாருக்காக இந்த வேலையைச் செய்தான்? இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார்? எதற்காகத் தகவல் திருட்டு நாடகம் அரங்கேறியது? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தற்போது தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மின்வாரிய ரகசியங்கள் பெங்களூர் கடைக்குச் சென்ற விவகாரம் கோட்டை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.”
