பிரேசில் நாட்டின் ரெசிபி நகரில், இளநீர் விற்பனை செய்யும் இடத்திலிருந்த ஒரு பேரல் திடீரென வெடித்துச் சிதறிய அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள இரண்டு இளைஞர்கள் பேரல்களைக் கையாண்டு கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஒரு இளைஞர் பேரலைத் திறக்க முயற்சிக்க, மற்றொருவர் விளையாட்டுத்தனமாகத் தன்னிடம் இருந்த தீக்குச்சியை பற்றவைத்துப் பேரலின் அருகே கொண்டு சென்றுள்ளார். அவர் தீயைப் பேரலின் உள்ளே காட்டிய அடுத்த நொடியே, உள்ளே இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த வெடிப்பின் வேகத்தில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த இரண்டு இளைஞர்களும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

“>

 

தற்போது அவர்கள் இருவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ள நிலையில், ஆபத்தான பொருட்களுக்கு அருகே நெருப்பைக் கொண்டு செல்வது எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக மாறியுள்ளது.