உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டத்தின் லஹாகா அலிகஞ்ச் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பள்ளியில் ஏற்கனவே உள்ள இந்திய தேசிய கொடிக்கம்பத்தில் நேற்று முன்தினம்  பாலஸ்தீன் நாட்டின் கொடி ஏற்றப்பட்டது. இதனை கிராமத்தினர் கண்டித்து கேள்வி எழுப்பியதற்கு, சம்பந்தப்பட்ட சதாம், பவ்ரா, அனே உள்ளிட்ட ஏழு பேர் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட, போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாலஸ்தீன் கொடியை அகற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசியக் கொடிக்கம்பத்தில் வேறு நாட்டின் கொடியை ஏற்றியது பேசப்படும் விவாதமாக மாறியுள்ளது.