காசர்கோட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள் ISIS ஆதரிப்பது போல் தோன்றும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் காணொளியில், சீருடை அணிந்த சில இளைஞர்கள் “ (ISIS) ஆள்காட்டி விரல்” சைகையை காட்டியவாறு காணப்படுகிறார்கள். மேலும், அவர்கள் கருப்பு நிறத் துணியில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்ட ஷஹாதா (இஸ்லாமிய உறுதிமொழி) பதாகையையும் வைத்திருப்பது பதிவாகியுள்ளது.
Welcome to Kerala pic.twitter.com/YsMoDJcnBq
— Kreately.in (@KreatelyMedia) October 21, 2025
அந்தக் காணொளியில் பயன்படுத்தப்பட்ட பைக்குகளின் பதிவு எண்ணைப் பார்த்தால், அது காசர்கோட்டில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இளைஞர்கள் அரபு எழுத்துக்களுடன் கூடிய துணியால் முகத்தின் ஒரு பகுதியை மூடியிருப்பதால், அவர்கள் பயங்கரவாதிகளின் தோற்றத்தை ஒத்துப் போகின்றனர். உற்சாகமான பின்னணிப் பாடலுடன் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளி, சமூக ஊடக தளமான X வழியாக வேகமாகப் பரவி வருகிறது. மேலும் அந்தக் காணொளியின் உண்மைத்தன்மை மற்றும் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
