மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறிதலைமைக்கு கடிதம் எழுதியது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து காரைக்குடி நகராட்சியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே ஒரு மதிமுக கவுன்சிலரும் தற்போது ராஜினாமா செய்து உள்ளார். இன்னும் சில நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மதிமுக உறுப்பினர்கள் விலக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.