தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டது. அதன்படி பள்ளி கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களுக்கு பக்கத்தில் உள்ள கடைகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளை கணக்கெடுப்பு நடத்தி மூடப்பட்டது.

இந்த நிலையில் இந்த மூடப்பட்ட கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுடைய வாழ்வாதாரம் தற்போது கேள்வி க்குறியாகிய நிலையில் அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதாவது மூடப்பட்ட கடையில் பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் கவுன்சிலின் மூலமாக பக்கத்தில் நிற்கும் கடைகளில் காலி பணியிடங்களை பொறுத்து பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.