பொதுவாக புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் வீடு கட்டுவதற்கு முன்பாக போர்வெல் போட வேண்டும். வீடு கட்டும் இடத்திற்கு பக்கத்தில் மின்கம்பங்கள் இருந்தால் பிரச்சினை கிடையாது. ஆனால் மின்கம்பங்கள் இல்லாத பகுதியில் வீடு கட்டினால் மின்கம்பங்கள் அமைத்து அதற்கு செலவு செய்து போர்வெல் போட வேண்டும். தண்ணீரை பயன்படுத்துவதற்கு மின்சார வாரிய அலுவலகத்தை நாடி தற்காலிக வணிக பயன்பாட்டு கட்டணம் வைப்புத் தொகையை செலுத்த வேண்டியது வரும்.

இந்த கட்டணம் நிர்வாக ரீதியானது. இதில் மின்கம்பங்களை ஏற்றி வருவதற்கு வாகனச் செலவு, கம்பம் நடுதல் மற்றும் மின் இணைப்பு வழங்கி கணக்கிடும் மீட்டர் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் மின்கம்பம் ஏற்றி வரும் வாகனத்தின் வாடகை, குழி தோண்டும் பொக்லைன் செலவு, மின் இணைப்பு வழங்க வரும் ஊழியர்களுக்கு டீ, காபி செலவு என தனித்தொகை செலுத்த வேண்டியது வருகிறது. இந்த நிலையில் மின்கம்பங்களை ஏற்று இறக்குவதற்கு கூலி மற்றும், ஸ்பெஷல் ஊக்கத்தொகைகளை கேட்க வேண்டாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கான பொருட்கள் அனைத்துமே மின்வாரியம் தான் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோரிடமிருந்து பணம் கேட்பதில் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து குறைகள் இருந்தால் மின்சார சட்டப்படி மின் நுகவோர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மின் நுகர்வோர் குறைவு மற்றும் மின் குறைகள் தீர்ப்பாளர் போன்ற அமைப்பு மூலம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.