பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேரா பதேகி. இவர் பெரும்பாலும் படங்களில் ஒரு குத்து பாட்டுக்கு நடனமாடி வருகிறார். இவர் தமிழில் வெளியான தோழா படத்தில் டோர் நம்பர் ஒன் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் நடிகை நேரா பதேகியின் உடல் அமைப்பை வைத்து சமீபத்தில் ஒரு தவறான வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கு தற்போது நடிகை நேரா பதேகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இதற்கு முன்பு அவர்கள் இப்படி பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எனக்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை மற்ற நடிகைகளை இப்படி செய்தால் அது பெரிய அளவில் பேசப்படாது என்பதற்காக இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக இவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. நான் ஒரு நல்ல உடலுடன் இருக்கிறேன். அதற்காக நான் வெட்கப்படவில்லை. மேலும் ஒவ்வொரு நபரையும் பிடித்து அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாது என்று கூறியுள்ளார்.