திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பலவேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகளை வழங்கிச் வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருதும், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருதும் வழங்கப்பட உள்ளது.