தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களில் முதல் கட்டமாக பள்ளிக்கு 25 மாணவர்களின் விவரங்களை கண்டறிந்து ஜூலை இருபதாம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி குறித்தும் அவர்கள் தொடர்ச்சியாக பள்ளியின் மீது ஈடுபாடும் பொறுப்பும் உள்ள நபர்களாக பயணிப்பது தொடர்பாக குவிநோக்கு குழு கலந்துரையாடல் நடைபெற்றது.

இதனை தொடர்ந்துஅரசு பள்ளியின் நலம் மீது பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களை வருகின்ற ஜூலை 20ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டும் எனவும் அந்த மாணவர்களின் தகவல்களை இணையதள பக்கத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஜனவரி மாதத்தில் முன்னாள் மாணவர்கள் கூடுகையை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை பழைய மாணவர்களின் உதவியோடு பெற அரசு திட்டமிட்டுள்ளது.