யானைகள் என்றாலே அறிவுக்கும், பாசத்திற்கும் பெயர் போனவை என்பது உலகறிந்த உண்மை. அதற்குச் சான்று சொல்லும் வகையில் ஒரு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ‘நெஞ்சை உருக்கி’ வருகிறது.

தன் பாகனுடன் காட்டிற்குச் சென்ற ஒரு யானை, இடையில் பாகனுக்குக் கடும் தாகம் எடுப்பதைக் கவனித்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்த கை அடிபம்பை (Handpump) பார்த்த பாகன், கையில் பாத்திரம் எதுவும் இல்லாததால் எப்படித் தண்ணீர் குடிப்பது என்று தவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ajmat Husain (@kushinagar_king01)

இதைப் பார்த்த அந்தப் பாசக்கார யானை, சட்டென்று தனது தும்பிக்கையால் அடிபம்பின் கைப்பிடியைப் பிடித்து லாவகமாக இயக்கத் தொடங்கியது. தண்ணீர் கொட்டத் தொடங்கியதும் பாகன் தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள, அந்த யானை ஒரு மனிதனைப் போலவே பொறுமையாகப் பம்பை அடித்துக் கொண்டே இருந்தது.

‘குஷிநகர் கிங்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, நம்பிக்கைக்கும், காதலுக்கும் ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்துள்ளது. “யானைக்கு இருக்கும் அறிவு கூட சில மனிதர்களுக்கு இல்லை” என இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் யானையின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.