ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தையல் கலைஞர் ஒருவர் கிழிந்த ரூபாய் நோட்டுகளைத் தையல் மிஷின் மூலம் தைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அந்த நாட்டில் கடந்த 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய நோட்டுகள் அச்சடிக்கப்படாததால், மக்கள் வேறு வழியின்றி பழைய நோட்டுகளையே தைத்துப் பயன்படுத்துவதாகக் கூறி இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

இந்தத் தகவல் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், சோமாலியாவின் இன்றைய நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. அந்த நாடு தற்போது உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை (Mobile Money) முறையைப் பின்பற்றி வருகிறது.

அங்கு டீக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொபைல் ஆப் மூலமே பணம் செலுத்துகின்றனர்.

மிக ஏழ்மையான பகுதிகளில் மட்டுமே இப்போதும் இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. மற்றபடி சோமாலியா பணமில்லா சமூகமாக (Cashless Society) மாறிவிட்டதே உண்மை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, வைரல் வீடியோவில் காட்டப்படுவது அந்த நாட்டின் ஒரு சிறு பகுதி மட்டுமே தவிர, அதுவே ஒட்டுமொத்த சோமாலியாவின் பொருளாதார நிலை கிடையாது.