மத்திய கிழக்கில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள ஒரு பகிரங்க எச்சரிக்கை ஒட்டுமொத்த உலகையுமே அதிர வைத்துள்ளது.

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ட்ரம்ப் ஏற்கனவே கெடு விதித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மிரட்டலை விடுத்துள்ளார்.

அதில், “இன்றிரவு ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகமே அழியப்போகிறது; அப்படி அழியும் நாகரிகம் இனி ஒருபோதும் திரும்பாது” என்று மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பிடிவாதம் தொடர்ந்தால் அந்த நாடே தரைமட்டமாக்கப்படும் என்பதை ட்ரம்ப் மறைமுகமாக எச்சரித்துள்ள நிலையில், “ஈரான் மக்களை இனி அந்த கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என அவர் கூறியிருப்பது போர் தொடங்கிவிட்டதையே உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  ட்ரம்பின் இந்த “இன்றிரவு” என்ற வார்த்தை ஈரானை மட்டுமின்றி உலக நாடுகளையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.