மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

எந்நேரமும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மிக முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

குறிப்பாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்தியர்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பு கருதி வசிக்கும் இடத்திலேயே இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வரும் நிலையில், இந்திய அரசு விடுத்துள்ள இந்த “48 மணி நேரக் கெடு” இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.