பென்சில்வேனியா பகுதியில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில், ‘கமாண்டர் 114B’ ரக சிறிய விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியது. நியூஜெர்சியிலிருந்து இந்தியானா நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால், பைலட் வேறு வழியின்றி ஓடிக்கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையே விமானத்தைச் சாலையிலேயே இறக்கினார்.
இந்த காட்சி அங்கிருந்த வாகனங்களின் டேஷ்கேமில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விமானத்தில் இருந்த 65 வயது முதியவர் மற்றும் 34 வயது பெண் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக எந்தக் காயமுமின்றி உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தால் அந்த நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
<a href=”http://
Weisenberg Township, Pennsylvania – A small aircraft made a dramatic emergency landing on the eastbound lanes of Interstate 78 in Weisenberg Township, Lehigh County, on Friday afternoon.The plane, a single-engine aircraft, was forced to land on the busy highway after experiencing… pic.twitter.com/oG3EzPFLd5
— NextMinute News (@nextminutenews7) April 5, 2026
“>
பின்னர் அதிகாரிகள் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி அருகில் உள்ள விமான நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர். இது குறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
